இந்தியா

தோழியை மணந்த பெண்: பாலின மாற்று அறுவை சிகிச்சை

DIN

கடந்த மூன்று ஆண்டுகளாக தனியார் நிறுவனம் ஒன்றில் பணி புரிந்து வந்த இரண்டு இளம் பெண்கள் நெருங்கிய தோழிகளாயினர். ஒருவரை விட்டு மற்றொருவர் பிரிய மனமில்லாத நிலையில், இருவரும் திருமணம் செய்ய முடிவு செய்தனர். இந்தச் சம்பவம் ஒடிஸா மாநிலத்திலுள்ள மல்கங்கிரி மாவட்டத்தில் நடந்தது.

திருமணம் செய்து கொள்ள தங்கள் பாலினம் தடையாக இருக்கக் கூடாது என்று முடிவின்படி, இருவரில் ஒருவர் ஆணாக மாற முடிவு செய்தனர். அதற்கான சிகிச்சையை கடந்த ஆண்டு ஜூலை 3-ஆம் தேதி தில்லியிலுள்ள மருத்துவமனையில் மேற்கொண்டார் பெண்ணின் இணையர். கிட்டத்தட்ட 7 லட்சம் ரூபாய் செலவழித்து பாலின மாற்று அறுவைச் சிகிச்சை செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிப்ரவரி 4-ஆம் தேதி இருவீட்டார் சம்மதத்துடன் அவர்களது திருமணம் நடைபெற்றது. இந்தச் சம்பவம் அந்தப் பகுதி மக்களிடையே பாராட்டுக்களையும் அதே சமயம் விமரிசனத்தையும் உருவாக்கியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மழை வேண்டி சிறப்புத் தொழுகை

துணை மின் நிலையத்தில் தீப்பற்றி எரிந்த இரு மின் மாற்றிகள்: 6 மணி நேர மின் தடையால் மக்கள் கடும் அவதி

காஷ்மீரில் பயங்கரவாதிகளைத் தேடும் பணி தீவிரம்: இந்திய விமானப் படையினர் மீதான தாக்குதல் எதிரொலி

ரேபரேலியில் ராகுல் காந்தி: தீதும் நன்றும்...

இருசக்கர வாகனம் பழுது பாா்க்கும் தொழிலாளா் சங்க ஆண்டு விழா

SCROLL FOR NEXT