இந்தியா

தில்லி பேரவைத் தேர்தல்: 62 இடங்களில் ஆம் ஆத்மி வெற்றி

DIN


தில்லி பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி 62 இடங்களிலும், பாஜக 8 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.

70 பேரவைத் தொகுதிகள் கொண்ட தில்லி சட்டப்பேரவைக்கு கடந்த சனிக்கிழமை தேர்தல் நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று (செவ்வாய்கிழமை) காலை முதல் நடைபெற்று வந்தது. தொடக்கம் முதலே முன்னிலை வகித்து வந்த ஆம் ஆத்மி 62 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. மீதமுள்ள 8 தொகுதிகளை பாஜக கைப்பற்றியுள்ளது. காங்கிரஸ் கட்சி ஒரு இடத்தில்கூட வெற்றி பெறவில்லை.

தில்லியில் ஆட்சியமைக்க 36 இடங்கள் மட்டுமே தேவை என்ற நிலையில், ஆம் ஆத்மி 62 இடங்களில் வெற்றி பெற்று அசுர பலத்தோடு உள்ளது. இதன்மூலம், அரவிந்த் கேஜரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி தில்லியில் மூன்றாவது முறையாக ஆட்சியமைக்கவுள்ளது.

வாக்கு சதவீதம்:

ஆம் ஆத்மி: 53.57 சதவீதம்

பாஜக: 38.51 சதவீதம்

காங்கிரஸ்: 4.26 சதவீதம் 

தில்லி மக்கள் வகுப்புவாத அரசியலுக்கு எதிராக வாக்களித்துள்ளதாக நாடு முழுவதிலும் உள்ள எதிர்க்கட்சித் தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதேசமயம் பிரதமர் நரேந்திர மோடி, ராகுல் காந்தி, மம்தா பானர்ஜி, மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்களும் அரவிந்த் கேஜரிவாலுக்கும், ஆம் ஆத்மிக்கும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘இது மார்பிங்’ சமந்தாவுக்கு ரசிகர்கள் ஆதரவு!

ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயலுக்கு இடைக்கால ஜாமீன்!

ராகுலை விமர்சித்து விடியோ: ஜெ.பி.நட்டா மீது வழக்குப்பதிவு

காந்தாரி.. ஈஷா ரெப்பா!

ஸ்ரீரங்கம் தேரோட்டம் கோலாகலம்!

SCROLL FOR NEXT