இந்தியா

தில்லியில் அரவிந்த் கேஜரிவால் தலைமையிலான புதிய அரசு 16ஆம் தேதி பதவியேற்பு

DIN

அரவிந்த் கேஜரிவால் வருகிற 16ஆம் தேதி தில்லியின் முதல்வராக 3ஆவது முறையாகப் பதவியேற்கவுள்ளார். இந்தப் புதிய அரசில் அமைச்சர்கள் உள்ளிட்டோரும் பதவியேற்கவுள்ளனர்.

தில்லியில் மொத்தம் உள்ள 70 சட்டப்பேரவைத் தொகுதிகளில் அரவிந்த் கேஜரிவால் தலைமையிலான ஆம்ஆத்மி கட்சி 62 இடங்களைக் கைப்பற்றி அமோக வெற்றி பெற்று தொடர்ந்து 3ஆவது முறையாக ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. ஆம் ஆத்மி கட்சிக்கு 53 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.

இதன் மூலம் தில்லி முதல்வராக அரவிந்த் கேஜரிவால் தொடர்ந்து மூன்றாவது முறையாக பிப்ரவரி 16ஆம் தேதி பதவியேற்க உள்ளார். ராம் லீலா மைதானத்தில் இந்தப் பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

இந்தத் தேர்தலில் பாஜக 8  இடங்களில் வென்றது. பாஜகவுக்கு கடந்த தேர்தலைவிட 6 சதவீத வாக்குகள் அதிகமாக அதாவது 38 சதவீத வாக்குகளும் கிடைத்துள்ளன. 

கடந்த தேர்தலைப் போலவே இந்த தேர்தலிலும் காங்கிரஸ் ஒரு இடத்தில்கூட வெற்றி பெறவில்லை. மேலும் காங்கிரஸ் கட்சிக்கு 5 சதவீத வாக்குகளே கிடைத்துள்ளன. காங்கிரஸ் வேட்பாளர்களில் 63 பேர் டெபாசிட்டுகளை இழந்துள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கருப்புப் பூனை...!

ரே பரேலியில் ராகுல் காந்தி வேட்புமனுத் தாக்கல்!

ப்ளே ஆஃப் வாய்ப்பை உறுதி செய்யுமா கொல்கத்தா?

பயப்பட வேண்டாம், ஓட வேண்டாம்: யாரைச் சொல்கிறார் மோடி?

பெ. சுபாஷ் சந்திர போஸ் காலமானார்

SCROLL FOR NEXT