முகப்பு
இந்தியா

தேர்தல் எதிரொலி: தில்லி காங்கிரஸுக்கு புதிய பொறுப்பாளர் நியமனம்

தில்லி காங்கிரஸ்ஸின் தலைவர் மற்றும் பொறுப்பாளர் ராஜிநாமா செய்ததையடுத்து, தில்லிக்குப் புதிய பொறுப்பாளரை காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி நியமித்துள்ளார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 3:49 PM
கோப்புப்படம்
பகிர்:

தில்லி காங்கிரஸ்ஸின் தலைவர் மற்றும் பொறுப்பாளர் ராஜிநாமா செய்ததையடுத்து, தில்லிக்குப் புதிய பொறுப்பாளரை காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி நியமித்துள்ளார்.

தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தமுள்ள 70 தொகுதிகளில் ஒரு தொகுதியில்கூட காங்கிரஸ் கட்சி வெற்றி பெறவில்லை. காங்கிரஸ் வேட்பாளர்களில் 63 பேர் டெபாசிட்டுகளை இழந்தனர். இந்தப் படுதோல்வியையடுத்து, தில்லி காங்கிரஸ் தலைவர் சுபாஷ் சோப்ரா மற்றும் தில்லி பொறுப்பாளர் பிசி சாக்கோ ஆகியோர் தங்களது பொறுப்புகளை ராஜிநாமா செய்தனர்.

இந்நிலையில் இவர்களது ராஜிநாமாவை ஏற்றுக்கொண்ட காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி, சக்தி சின் கோஹில்லை தில்லியின் இடைக்காலப் பொறுப்பாளராக நியமித்துள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →