இந்தியா

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு உதவ இலவச தொலைபேசி எண்கள்: உ.பி. அரசு அறிவிப்பு

DIN

உத்தரப்பிரதேசத்தில் பள்ளி பொதுத்தேர்வுகள் அடுத்த வாரம் தொடங்கவுள்ள நிலையில், மாணவர்களின் சந்தேகங்களைத் தீர்க்க கட்டணமில்லா தொலைபேசி எண்களை அம்மாநில அரசு அறிவித்துள்ளது. 

உத்தரப்பிரதேச மாநிலத்தில் தேர்வு எழுதும் பள்ளி மாணவர்களுக்கு உதவியாக  1800-180-5310 மற்றும் 1800-180-5312 என்ற இலவச தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை இந்த எண்கள் செயல்பாட்டில் இருக்கும் என்றும் தேர்வுகள் குறித்து மாணவர்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருக்குமேயானால், மேற்குறிப்பிட்ட இலவச எண்களை அழைக்கலாம் என்றும் துணை முதல்வர் தினேஷ் சர்மா தெரிவித்துள்ளார். 

அதுமட்டுமின்றி, ஆங்கிலம், வாழ்க்கை அறிவியல், புவியியல், பொது அறிவியல், இந்தி, சமஸ்கிருதம், வேதியியல் உள்ளிட்ட பல்வேறு பாடங்களின் வல்லுநர்களையும் இந்த எண்ணில் தொடர்பு கொண்டு பாடங்கள் தொடர்பான சந்தேகங்களுக்கு தீர்வு காணலாம் என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெயிலில் இறந்தவர்களுக்கு நிதியுதவி: கேரள அரசை வலியுறுத்தும் காங்கிரஸ்!

அரவிந்த் கேஜரிவால் இடைக்கால ஜாமீன் மனு ஒத்திவைப்பு

பத்திரிகையாளர் சவுக்கு சங்கர் தாக்கப்பட்டாரா என விசாரிக்க வேண்டும்: இபிஎஸ்

ஆவேஷம் ரூ.150 கோடி வசூல்!

அன்பே அன்னா..!

SCROLL FOR NEXT