சிறுமி பாலியல் வன்கொடுமை 
இந்தியா

ஐந்து வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞர் கைது

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் ஐந்து வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த இருபது வயது இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்

ANI

விசாகப்பட்டினம்: ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் ஐந்து வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த இருபது வயது இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த கொடூர சம்பவம் விசாகப்பட்டினம் மாவட்டம் பெண்டூர்த்தி காவல் நிலைய எல்லைக்குள் நடைபெற்றுள்ளது. இதுதொடர்பாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்வரூப ராணி செய்தியாளர்களிடம் கூறியதாவது:

இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோரிடம் இருந்து வியாழன் அன்று புகார் அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து நடந்த விசாரணையில் அதே பகுதியைச் சேர்ந்த ஜெகதீஷ் (20) என்பவர் சிறுமிக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து இந்த கொடூரத்தை அரங்கேற்றியிருக்கிறாரா என்பது தெரிய வந்தது. சிறுமி மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட ஜெகதீஷ் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ளார். விசாரணை தொடந்து நடைபெற்று வருகிறது 

இவ்வாறு அவர் தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நல்லகண்ணு உடலுக்கு விஜய் அஞ்சலி!

இஸ்ரேலில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு - புகைப்படங்கள்

சமீரா, தீக்‌ஷனா பந்துவீச்சில் அசத்தல்..! சான்ட்னர் அதிரடியால் இலங்கைக்கு 169 ரன்கள் இலக்கு!

5 மணி நேரத்திற்கும் மேலாகக் காத்திருந்த IndiGo பயணிகள்! பணியாளர்களுடன் வாக்குவாதம்!

தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக மே.இ.தீவுகள் சிக்ஸர் மழை பொழியுமா? பயிற்சியாளர் பதில்!

SCROLL FOR NEXT