மேற்கு வங்கத்தில் 12 நாட்டு வெடிகுண்டுகள் கண்டெடுப்பு
மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள சியான் முலுக் கிராமத்தில் மூன்று இடங்களில் நாட்டு வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள சியான் முலுக் கிராமத்தில் மூன்று இடங்களில் நாட்டு வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இன்று காலை உள்ளூர் பஞ்சாயத்து அலுவலகத்தின் வாயிலுக்கு முன்னால் தரையில் சில குண்டுகள் சிதறிக் கிடப்பதாக போல்பூர் அருகே சியான் முலுக் கிராம மக்கள் தெரிவித்தனர். மேலும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அலுவலகம் மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் முன்பும் என மொத்தம் 12 நாட்டு வெடிகுண்டுகள் கண்டுடெக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து, வெடிகுண்டு அகற்றும் வீரர்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் அப்பகுதியில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.