முகப்பு
இந்தியா

தோப்புக்கரணம் போட்டால் பிளாட்ஃபார்ம் டிக்கெட் ஃப்ரீ: எங்கு தெரியுமா?

சில நிமிடங்கள் தோப்புக்கரணம் போட்டால் பிளாட்ஃபார்ம் டிக்கெட்டை இலவசமாக அளிக்கும் இயந்திரம் தில்லியின் ஆனந்த் விஹார் ரயில் நிலையத்தில் நிறுவப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 3:56 PM
பகிர்:

புது தில்லி: சில நிமிடங்கள் தோப்புக்கரணம் போட்டால் பிளாட்ஃபார்ம் டிக்கெட்டை இலவசமாக அளிக்கும் இயந்திரம் தில்லியின் ஆனந்த் விஹார் ரயில் நிலையத்தில் நிறுவப்பட்டுள்ளது.

இது குறித்த விடியோவை ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அந்த விடியோவில், சில இளைஞர்கள், ஆனந்த் விஹார் ரயில் நிலையத்தில் வைக்கப்பட்டிருக்கும் இயந்திரத்தின் முன்பு சில நிமிடங்கள் தோப்புக்கரணம் போடுகிறார்கள். உடனே அந்த இயந்திரத்தில் இருந்து பிளாட்ஃபார்ம் டிக்கெட் வெளியே வந்துவிழுகிறது.

மக்களின் உடல் ஆரோக்கியத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் ஆனந்த் விஹார் ரயில்நிலையத்தில் இந்த இயந்திரம் நிறுவப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் பியூஷ் கோயல் கூறியுள்ளார்.
 
முழு கட்டுரையைப் படிக்க →