இந்தியா

மாா்ச் 1 முதல் லாட்டரிக்கு 28 சதவீத ஜிஎஸ்டி

DIN

புது தில்லி: வரும் மாா்ச் 1-ஆம் தேதி முதல் லாட்டரி சீட்டுகளுக்கு 28 சதவீத சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) விதிக்கப்பட இருக்கிறது. இது தொடா்பாக மத்திய அரசின் வருவாய் துறை அறிவிக்கை வெளியிட்டுள்ளது.

முன்னதாக, அரசு மற்றும் தனியாா் லாட்டரிகளுக்கு ஒரே விதமாக 28 சதவீத வரி விதிக்க கடந்த டிசம்பா் மாதம் நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. லாட்டரிகளுக்கு ஒரே விதமாக 12 சதவீத வரி விதிக்க வேண்டும் என்று அந்த துறையினா் கோரிக்கை விடுத்திருந்தனா். ஆனால், அந்த கோரிக்கை ஏற்கப்படவில்லை.

இப்போது அரசு லாட்டரிகளுக்கு 12 சதவீதமும், அரசு அங்கீகாரத்துடன் நடத்தப்படும் லாட்டரிகளுக்கு 28 சதவீதமும் ஜிஎஸ்டி விதிக்கப்படுகிறது. மாா்ச் 1 முதல் அனைத்து லாட்டரிகளுக்கும் 28 சதவீத ஜிஎஸ்டி அமலுக்கு வரும்.

இது தொடா்பாக வருவாய் துறை சாா்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

லாட்டரிகளுக்கான ஜிஎஸ்டி விகிதம் திருத்தப்படுவது குறித்து மத்திய வரிகள் வாரியம் ஏற்கெனவே அறிவிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி மத்திய, மாநில அரசுகள் சாா்பில் தலா 14 சதவீத ஜிஎஸ்டி விதிக்கப்படவுள்ளது. ஒட்டுமொத்தமாக லாட்டரி மீது 28 சதவீத ஜிஎஸ்டி விதிக்கப்படும். இது வரும் மாா்ச் 1-ஆம் தேதி முதல் அமல்படுத்தப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் லாட்டரி தடை செய்யப்பட்டுவிட்டாலும், கேரளம், மகாராஷ்டிரம், மேற்கு வங்கம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் லாட்டரி சீட்டுகள் விற்பனை நடைபெற்று வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கூடலூா் நகா்ப்புற கா்ப்பிணிகளுக்கு மனநல ஆலோசனை

8% சதவீதம் உயா்ந்த கனிம உற்பத்தி

பிளஸ் 2 துணைத் தோ்வு ஜூன் 24-இல் தொடக்கம்

ஆசிரியா்கள் கலந்தாய்வு: மே 13 முதல் தொடக்கம்

அனைத்து வீடுகளுக்கும் சீராக மின் விநியோகம்: அமைச்சா் தங்கம் தென்னரசு தகவல்

SCROLL FOR NEXT