முகப்பு
இந்தியா

இணையத்தில் வைரலாகும் சாலையோர குட்டி நூலகம்

நாட்டின் வடகிழக்கு மாநிலமான மிஸோராமின் தலைநகர் ஐசாவிலில் நிறுவப்பட்டுள்ள சாலையோர குட்டி நூலகம் இணையத்தில் வரலாகப் பரவி வருகிறது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 3:58 PM
சாலையோர குட்டி நூலகம்
பகிர்:

புது தில்லி: நாட்டின் வடகிழக்கு மாநிலமான மிஸோராமின் தலைநகர் ஐசாவிலில் நிறுவப்பட்டுள்ள சாலையோர குட்டி நூலகம் இணையத்தில் வரலாகப் பரவி வருகிறது.

இந்திய வருவாய்த் துறையில் பணிபுரியும் அதிகாரியான பர்வீன் கஸ்வான் என்பவர் திங்களன்று தனது ட்விட்டர் பக்கத்தில்,  மிஸோராமின் தலைநகர் ஐசாவிலில் நிறுவப்பட்டுள்ள சாலையோர குட்டி நூலகம் பற்றிய தகவலை படங்களுடன் வெளியிட்டிருந்தார். அதில் அவர் குறிப்பிட்டிருந்ததாவது:

இதைத்தான் நாட்டில் உள்ள எல்லா நகரங்களும் பின்பற்ற வேண்டும். மிஸோராமின் தலைநகர் ஐசாவிலில் இதுபோல இரண்டு சாலையோர குட்டி நூலகங்கள் நிறுவப்பட்டுள்ளன. ஒரு நாட்டினை உருவாக்குவதற்கு நூலகங்கள்தான் சிறந்த முதலீடு. அதை எவ்வாறு செயல்படுத்த வேண்டும் என்பதை வடகிழக்கு பிரதேசம் நமக்கு காட்டியுள்ளது.

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

இத்தகைய நூலகங்கள் வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிப்பதோடு,  இலவசமாக புத்தகங்களை பரிமாறக் கொள்ள உதவுவதன் மூலமாக வாசிப்பு சார்ந்த குழுக்களை உண்டாக்க உதவுகிறது.  

அவரது இந்தப் பதிவிற்கும், சாலையோர நூலகம் அமைக்கப்பட்டுள்ளது குறித்தும் ட்விட்டர் பயனாளர்கள் பலரும்  தங்களது பாராட்டுகளைத் தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.