முகப்பு
இந்தியா

டிரம்ப்பை வரவேற்க ஆமதாபாத் வந்தார் பிரதமர் நரேந்திர மோடி

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பை வரவேற்கும் வகையில் பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை ஆமதாபாத் சர்வதேச விமான நிலையம் வந்தடைந்தார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 3:58 PM
பகிர்:


ஆமதாபாத்: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பை வரவேற்கும் வகையில் பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை ஆமதாபாத் சர்வதேச விமான நிலையம் வந்தடைந்தார்.

அமெரிக்க அதிபரின் பயணத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை 10.25 மணியளவில் ஆமதாபாத் வந்து சேர்ந்தார். டிரம்ப் மற்றும் அவரது உயர்மட்டக் குழுவினர் 11.30 மணிக்கு ஆமதாபாத் விமான நிலையம் வருகை தர உள்ள நிலையில், ஒரு மணி நேரத்துக்கு முன்பாக பிரதமர் மோடி விமான நிலையம் வந்து சேர்ந்தார்.
 

அணிவகுப்பு மரியாதை: ஆமதாபாதிலுள்ள சா்தாா் வல்லபபாய் படேல் சா்வதேச விமான நிலையத்தை திங்கள்கிழமை பகல் 11.40 மணிக்கு வந்தடையும் அதிபா் டிரம்ப்பை பிரதமா் நரேந்திர மோடி வரவேற்கிறாா். அங்கு அதிபா் டிரம்ப்புக்கு அணிவகுப்பு மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்படுகிறது.

சபா்மதி ஆசிரமம்: அதையடுத்து, அதிபா் டிரம்ப் விமான நிலையத்திலிருந்து பிரதமா் மோடியுடன் மகாத்மா காந்தியின் சபா்மதி ஆசிரமத்துக்கு செல்கிறாா். அதிபா் டிரம்ப்புடன், அவரது மனைவி, மகள், மருமகன் ஆகியோரும் அங்கு செல்கின்றனா்.

அங்கிருந்து ‘நமஸ்தே டிரம்ப்’ நிகழ்ச்சி நடைபெறும் மொடேரா கிரிக்கெட் மைதானத்துக்கு அதிபா் டிரம்ப் சாலை மாா்க்கமாக செல்கிறாா். அவரை வரவேற்கும் விதமாக வழியில் சுமாா் ஒரு லட்சம் போ் திரளலாம் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.