தில்லி சென்றார் டிரம்ப்
இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்துள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இன்று (திங்கள்கிழமை) மாலை ஆக்ராவில் இருந்து புறப்பட்டு தில்லிக்குச் சென்றார்.
இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்துள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இன்று (திங்கள்கிழமை) மாலை ஆக்ராவில் இருந்து புறப்பட்டு தில்லிக்குச் சென்றார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அவரது மனைவி மெலானியா டிரம்ப் ஆகியோர் இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக இன்று இந்தியா வந்தனர். ஆமதாபாத்தில் அதிபர் டிரம்ப் மற்றும் மெலானியா டிரம்ப்புக்கு பிரதமர் மோடி உற்சாக வரவேற்பை அளித்தார். இதன்பிறகு, டிரம்ப் தம்பதி சபர்மதி ஆசிரமம் சென்று பார்வையிட்டனர். பிரதமர் மோடியும் உடன் சென்றார். அங்கிருந்து மொடேரா மைதானத்துக்குச் சென்ற டிரம்ப் நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சியில் பங்கேற்று உரையாற்றினார். இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு பிரதமர் மோடி தில்லி விரைந்தார்.
இதைத் தொடர்ந்து டிரம்ப் மற்றும் அவரது மனைவி தாஜ் மகாலுக்குச் சென்று பார்வையிட்டனர்.
இதையடுத்து, ஆக்ராவில் இருந்து புறப்பட்ட டிரம்ப், அவரது மனைவியுடன் தில்லிக்குச் சென்றார். அங்கு மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி டிரம்ப்பை வரவேற்றார்.
இதையடுத்து, டிரம்ப் விமான நிலையத்தில் இருந்து ஐடிசி மௌர்யா ஹோட்டலுக்குச் சென்றார்.
நாளை காலை 10 மணியளவில் குடியரசுத் தலைவர் மாளிகையில் அணிவகுப்பு மரியாதையை ஏற்கும் டிரம்ப், 10.30 மணியளவில் மகாத்மா காந்தி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துகிறார். இதைத் தொடர்ந்து, 11 மணிக்கு ஹைதராபாத் இல்லத்தில் வைத்து பிரதமர் மோடியைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். பகல் 12.40 மணிக்கு ஒப்பந்தங்கள் பரிமாற்றம் மற்றும் செய்தியாளர் சந்திப்பு நடைபெறவுள்ளது.
இதையடுத்து, இரவு 7.30 மணிக்கு குடியரசுத் தலைவர் மாளிகையில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தைச் சந்திக்கும் டிரம்ப் இரவு 10 மணிக்கு அமெரிக்கா திரும்புகிறார்.