முகப்பு
இந்தியா

கால்வாயில் விழுந்து கார் விபத்து: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பலி

தெலுங்கானாவின் நல்கொண்டா மாவட்டத்தில் வியாழக்கிழமை அன்று கார் கால்வாயில் மோதியதில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் கொல்லப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

Updated On : 27 பிப்ரவரி, 2020 at 11:38 AM
பகிர்:


தெலுங்கானாவின் நல்கொண்டா மாவட்டத்தில் வியாழக்கிழமை அன்று கார் விபத்துக்குள்ளாகி கால்வாயில் விழுந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பலியானதாக போலீஸார் தெரிவித்தனர்.

பி.ஏ.பல்லே 'மண்டல்' (தொகுதி) துகியாலா கிராமத்திற்கு அருகே இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

காவல்துறையினரின் கூற்றுப்படி, கார் கட்டுப்பாட்டை மீறி பி.எம்.ஆர்.பி கால்வாயில் விழுந்தது.

இறந்தவர்கள் ஒர்சு ரகு, அவரது மனைவி அலிவேலு மற்றும் அவர்களின் மகள் கீர்த்தி என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்த விபத்தில் உயிர் தப்பிய அவர்களின் மகன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.