கொல்கத்தாவில் மமதா இறுதிக்கட்ட பிரசாரம்! நடந்து சென்று வாக்கு சேகரிப்பு!
கொல்கத்தாவில் மேற்குவங்க முதல்வர் மமதா பானர்ஜியின் இறுதிக்கட்ட பிரசாரம்...
மேற்குவங்க முதல்வர் மமதா பானர்ஜி, கொல்கத்தாவில் தனது இறுதிக்கட்ட பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறார்.
மேற்குவங்கத்தில் முதல்கட்டத் தேர்தல் கடந்த ஏப். 23 ஆம் தேதி நடந்து முடிந்த நிலையில் இரண்டாம் கட்டத் தேர்தல் ஏப். 29 ஆம் தேதி நடைபெற உள்ளது. மே 4 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்படுகின்றன.
அதன்படி மேற்குவங்கத்தில் இரண்டாம் கட்டத் தேர்தலுக்கான பிரசாரம் இன்றுடன் நிறைவு பெறும் நிலையில் அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிரமாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
Advertisement
Advertisement
பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித் ஷா ஆகியோர் இன்று மேற்குவங்கத்தில் பிரசாரம் செய்தனர்.
முதல்வர் மமதா பானர்ஜி இன்று மாலை பிரசாரம் முடிவதற்கு சில மணி நேரம் முன்பு தலைநகர் கொல்கத்தாவில் நடைப்பயணம் மேற்கொண்டார்.
சுமார் 8 கிமீ தூர நடைப்பயணத்தைத் தொடங்கிவைத்து மக்களிடையே வாக்கு சேகரித்தார்.
பின்னர் கொல்கத்தாவில் இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்துகொண்டு பயணித்து தனது வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்தார்.
இன்று மாலை 6 மணியுடன் மேற்குவங்கத்தில் பிரசாரம் நிறைவடைய உள்ளது.
Mamata Banerjee leads an 8 km padyatra in Kolkata region
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.