வன்முறையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இடம் கொடுக்கக் கூடாது: சொல்வது ஒரு பல்கலைக்கழகம்
வடகிழக்கு தில்லியில் நிகழ்த்தப்பட்ட வன்முறைக் கோரத் தாண்டவத்தில் வீடுகளை இழந்து தவிப்பவர்களுக்கு பல்கலைக் கழகத்தில் தங்க அனுமதிக்கக் கூடாது என்று ஜேஎன்யு பல்கலை நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
புது தில்லி: வடகிழக்கு தில்லியில் நிகழ்த்தப்பட்ட வன்முறைக் கோரத் தாண்டவத்தில் வீடுகளை இழந்து தவிப்பவர்களுக்கு பல்கலைக் கழகத்தில் தங்க அனுமதிக்கக் கூடாது என்று ஜேஎன்யு பல்கலை நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் பதிவாளர் பிரமோத் குமார் வெளியிட்ட அறிக்கையில், வடகிழக்கு தில்லியில் நடந்த வன்முறையில் பாதித்தவர்களை பல்கலைக்கழகத்தில் தங்க வைக்க அனுமதிக்க முடியாது. அதுபோன்ற முயற்சியில் ஈடுபடும் மாணவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஜேஎன்யு பல்கலை வளாகத்தை, தங்கும் முகாமாக மாற்றுவதற்கு மாணவர் சங்கத்துக்கு எந்த சட்ட உரிமையும் இல்லை என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பல்கலைக்கழகத்தை படிப்பதற்கும், ஆராய்ச்சிக்குமான இடமாக வைத்திருக்க வேண்டும் என்றும் மாணவர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.