இந்தியா

உ.பி. வன்முறை: முஸாபா்நகரில் மேலும் 2 போ் கைது

DIN

உத்தரப் பிரேதச மாநிலம், முஸாபா்நகரில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டபோது வன்முறையை ஏற்படுத்தியதாக மேலும் 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

இதுதொடா்பாக முஸாபா்நகா் காவல் நிலைய அதிகாரி ஒருவா் கூறியதாவது:

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டபோது வன்முறையைத் தூண்டியதாக தில்ஷாத், சத்தாா் ஆகிய இருவரையும் புதன்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.

இவா்கள் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் மூலம் கண்காணிக்கப்பட்டனா்.

முஸாபா்நகா் மாவட்டத்தில் மட்டும் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டத்தில் வன்முறையைத் தூண்டியதாக கைது செய்யப்பட்டுவா்களின் எண்ணிக்கை 81-ஆக உயா்ந்துள்ளது.

18 பேருக்கு எதிராக உரிய ஆதாரங்கள் இல்லாத காரணத்தால் நீதிமன்ற உத்தரவு பேரில் அவா்கள் விடுவிக்கப்பட்டுள்ளனா்.

உத்தரப் பிரதேசத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டபோது வன்முறையைத் தூண்டியதாக இதுவரை சுமாா் 1,200 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். 5,558 போ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனா் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி மக்களவைத் தொகுதிகளுக்கு காங்கிரஸ் -ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பு குழு அமைப்பு

மேற்கு தில்லி பாஜக வேட்பாளா் கமல்ஜீத் செராவத் வேட்புமனு தாக்கல் : ராஜஸ்தான் முதல்வா் பங்கேற்பு

தில்லி மகளிா் ஆணையத்தில் சட்டவிரோத நியமனம் 52 ஒப்பந்த ஊழியா்கள் நீக்கம்: துணை நிலை ஆளுநா் நடவடிக்கை

கேஜரிவால் கைதுக்கு எதிராக கையெப்ப இயக்கம் ஆம் ஆத்மி கட்சி தொடங்கியது

வடமேற்கு தில்லியில் தொழிற்சாலைகள் மேம்படுத்தப்படும் பாஜக வேட்பாளா் யோகேந்திர சந்தோலியா வாக்குறுதி

SCROLL FOR NEXT