பனிப்பொழிவு: இமாச்சலத்துக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுப்பு
இமாச்சலத்தில் கடும் பனிப்பொழிவு காரணமாக சுமார் 800க்கும் மேற்பட்ட சாலைகளில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.
ஷிம்லா: இமாச்சலத்தில் கடும் பனிப்பொழிவு காரணமாக சுமார் 800க்கும் மேற்பட்ட சாலைகளில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.
அதே நேரம், ஜனவரி 13 மற்றும் 16ம் தேதிகளில் இமாச்சலத்தில் கனமழை மற்றும் பனிப்பொழிவு இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இமாச்சலத்தில் குஃப்ரி மற்றும் மணாலி பகுதிகளில் தொடர்ந்து பூஜ்ஜியத்துக்கும் குறைவாக வெப்பநிலை பதிவாகி வருகிறது. அதே சமயம் லஹௌல் மற்றும் ஸ்பிடி மாவட்டங்களில் மைனஸ் 14.3 என்ற அளவில் வெப்பநிலை பதிவாகியுள்ளது.
பனிப்பொழிவு தொடங்கியது முதலே இமாச்சலத்தில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.