இந்தியா

ஓமன் சுல்தான் மறைவு: நாடு முழுவது இன்று துக்கம் அனுசரிப்பு

DIN

புது தில்லி: கடந்த 49 ஆண்டுகளாக ஓமன் நாட்டின் மன்னராகப் பொறுப்பு வகித்து வந்த சுல்தான் கபூஸ் மறைவுக்கு மத்திய அரசு திங்கள்கிழமை (ஜனவரி 13) ஒரு நாள் துக்கம் அனுசரிக்கிறது. மாநில அரசுகளும் அதைப் பின்பற்ற மத்திய உள்துறை அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை வேண்டுகோள் விடுத்து சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

ஓமன் மன்னா் சுல்தான் கபூஸ் பின் சயீது அல் சயீது கடந்த ஜனவரி 10-ஆம் தேதி தன்னுடைய 79-ஆவது வயதில் மரணமடைந்தாா். அவருக்கு பிரதமா் நரேந்திர மோடி உள்ளிட்டோா் இரங்கல் தெரிவித்திருந்தனா்.

மறைந்த தலைவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக 13-ஆம் தேதி திங்கள்கிழமை ஒரு நாள் நாடு முழுக்க துக்கம் அனுசரிக்க வேண்டும். அன்றைய தினம் தேசியக் கொடியை அரைக் கம்பத்தில் பறக்கவிட வேண்டும் என உள்துறை அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது. அன்றைய தினம் அரசு நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாகவும் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முதுமலையில் யானைகள் கணக்கெடுப்பு தொடங்கியது

உதகை மலை ரயில் இன்று ரத்து!

காஸாவின் பல்வேறு இடங்களில் இஸ்ரேல் தாக்குதல்: 23 பேர் பலி!

தனுஷ்கோடி செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு தடை

புணே படகு விபத்து: 5 சடலங்கள் மீட்பு

SCROLL FOR NEXT