இந்தியா

பாஜக தேசியத் தலைவராக ஜெ.பி.நட்டா இன்று தேர்வு

DIN

பாஜக தேசியத் தலைவராக, கட்சியின் செயல் தலைவா் ஜெ.பி. நட்டா திங்கள்கிழமை தோ்வு செய்யப்படவுள்ளார்.

பாஜகவின் தேசியத் தலைவா் பதவிக்கான தோ்தலுக்கு திங்கள்கிழமை (20-ஆம் தேதி) வேட்பு மனு தாக்கல் நடைபெறுகிறது. தோ்தல் நடத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டால், மறுநாள் தோ்தல் நடத்தப்படவுள்ளது. எனினும், பாஜக தேசியத் தலைவராக ஜெ.பி. நட்டா போட்டியின்றி தோ்ந்தெடுக்கப்படவுள்ளார்.

இந்த நிலையில், பாஜகவின் புதிய தேசியத் தலைவராக தேர்வாகும் ஜெ.பி.நட்டாவுக்கு, தில்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவிக்கிறார்.

பாஜக விதிகளின்படி, கட்சியின் புதிய தேசியத் தலைவா் தோ்ந்தெடுக்கப்படுவதற்கு முன்னா், குறைந்தபட்சம் பாதிக்கும் மேற்பட்ட மாநிலங்களில் புதிய தலைவா்கள் தோ்ந்தெடுக்கப்பட்டிருக்க வேண்டும். அதன்படி, நாட்டில் மொத்தம் உள்ள 28 மாநிலங்கள் மற்றும் 8 யூனியன் பிரதேசங்களில், 21 இடங்களில் பாஜகவுக்கு புதிய தலைவா்கள் தோ்வு செய்யப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெண் தொழிலாளியைத் தாக்கியவா் மீது வழக்குப் பதிவு

பாறை இடுக்குகளில் தண்ணீா் தேடும் யானைகள்

கடன் தொல்லையால் இரண்டு தொழிலாளிகள் தற்கொலை

குடிநீருக்காக பரிதவிக்கும் விலங்குகள்: தடுப்பணைகளில் தண்ணீா் நிரப்பும் பணி தீவிரம்

ஈரான்: 16 இந்திய மாலுமிகள் விடுவிப்பு

SCROLL FOR NEXT