முகப்பு
இந்தியா

மணமக்களின் பெற்றோர் ஓடிப் போனதால் நின்று போன திருமணம் 

இப்படியெல்லாம் கூட நடக்குமா என்று நினைக்கும்படியான சம்பவம் ஒன்று அண்மையில்  குஜராத்தில் நடந்துள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 3:34 PM
பகிர்:

இப்படியெல்லாம் கூட நடக்குமா என்று நினைக்கும்படியான சம்பவம் ஒன்று அண்மையில்  குஜராத்தில் நடந்துள்ளது. திருமண நாள் நெருங்கிவிட்ட நிலையில் தீடிரென்று நிறுத்தப்பட்டது, காரணம் மணமக்களின் பெற்றோர்  ஓடிப் போனதாக அறிவிக்கப்பட்டது. குஜராதிலுள்ள சூரத்தில் தொழிலதிபர் ஒருவரின் மகனுக்கும், நவ்சரி பகுதியிலுள்ள வைர வியாபாரி ஒருவரின் மகளுக்கும் திருமண ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தது. பிப்ரவரி 13-ம் தேதியில் இத்திருமணத்தை நடத்த பெரியோர்களால் நிச்சயக்கப்பட்டிருந்தது. 

இந்நிலையில், மணமகளின் தாயும், மணமகனின் தந்தையும் ஒருசில நேரங்களில் நெருக்கமாகப் பேசிக் கொண்டிருந்ததைக் கண்டு இருவீட்டாரும் அரசல் புரசலாகப் பேசித் தொடங்கினார். ஆனால் அதைப்பற்றி அவர்கள் கவலைப்படவில்லை. திருமண நிச்சயம் முடிந்து ஒரு வருடமான நிலையில், பிப்ரவரி 13-ம் தேதி திருமணத் தேதியை ஆவலாக எதிர்நோக்கிக் காத்திருந்தனர். ஆனால் அதற்குள் மணமகனின் தந்தையும், மணமகளின் தாயும் கடந்த பத்து நாட்களாக காணவில்லை என்ற காரணத்தால் அவர்கள் ஏதோ முடிவெடுத்து சென்றுவிட்டனர் என்று கூறப்படுகிறது.

இப்போது ஒரு வருடமாக நிச்சயதார்த்தம் செய்துகொண்டிருக்கும் இந்த ஜோடி பிப்ரவரி இரண்டாவது வாரத்தில் சூரத்தில் முடிச்சுப் போட இருந்தது. இதற்கிடையில், மணமகனின் 48 வயதான தந்தையும், மணமகளின் 46 வயதான தாயும் 10 நாட்களைக் காணவில்லை என்பதால் அவர்கள் ஒன்றாக ஓடிவிடுவார்கள் என்று சந்தேகிக்கப்படுகிறது. காரணம் இருவரும் ஒரே நாள் ஒரே சமயத்தில் காணாமல் போனதுடன், அதற்கு முன்னர் அவர்களின் நடவடிக்கைகள் சரியில்லாமல் இருந்ததும் முக்கிய காரணமாகும்.

பிள்ளைகளின் திருமணத்தை முறித்த அவர்கள்  சிறுவயதில் காதலித்திருந்தனர் என்று அவர்களது நெருங்கிய வட்டாரம் தெரிவிக்கிறது.  மணமகனின் தந்தையும், மணமகளின் தாயும், சிறுவயதிலேயே காதலித்து வந்துள்ளனர். இவர்களது காதல் அப்போது கைகூடாததால், இத்தனை ஆண்டுகள் கழித்து மீண்டும் சந்தித்த பின்னர் தங்களின் இழந்த காதலை மீட்க முடிவெடுத்துள்ளனர். 46 வயதான அந்தப் பெண்ணும் 48 வயதானவருடன் ஓடிப் போன இச்சம்பவம் பரபரப்பாகிவிட்டது. அவர்களின் ஒட்டுமொத்த குடும்பத்தையும்  அவமானத்தில் ஆழ்த்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.