ஓரினச் சேர்க்கை தொல்லையின் காரணமாக விடுதியில் பள்ளி மாணவர் தற்கொலை: 14 பேர் கைது
விடுதி ஊழியர்கள் மற்றும் சக மாணவர்கள் தந்த தொடர் ஓரினச் சேர்க்கை தொல்லையின் காரணமாக விடுதியில் பள்ளி மாணவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.
சந்த்ரபூர்: விடுதி ஊழியர்கள் மற்றும் சக மாணவர்கள் தந்த தொடர் ஓரினச் சேர்க்கை தொல்லையின் காரணமாக விடுதியில் பள்ளி மாணவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.
மகாராஷ்டிராவின் சந்த்ரபூர் மாவட்டத்தில் உள்ளது மரை படான் பகுதிக்கு அருகில் உள்ளது ஜூவிட் கிராமம். இங்கு சேவாதள் பள்ளி மற்றும் விடுதி செயல்பட்டு வருகிறது. இதில் அதே கிராமத்தைச் சேர்ந்த 18 வயது சிறுவன் ஒருவன் தங்கி பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறான்.
இந்த மாணவரின் கடந்த 18-ஆம் தேதியன்று தனது விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டான். தகவல் அறிந்து அங்கு வந்து விசாரணை செய்த போலீசார், அங்கு மாணவனின் டைரி ஒன்றைக் கணடெடுத்தனர். அதில் அந்த விடுதியில் தனக்கு நேரந்த பாலியல் ரீதியிலான தொல்லைகளை அந்த மாணவன் தெளிவாக குறிப்பிட்டிருந்தான். அத்துடன் அதற்கு காரணமானவர்களாக அந்த விடுதி ஊழியர்கள் மூவர் உள்ளிட்ட பல்வேறு மாணவர்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டிருந்தன.
இதையடுத்து விடுதி ஊழியர்கள் மூவர், சிறுவன் ஒருவன் உள்ளிட்ட 14 பேர்களை செவ்வாயன்று போலீசார் கைது செய்துள்ளனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த தகவல்களை மாவட்ட கூடுதல் காவல்துறை கண்காணிப்பாளர் பிரசாந்த் கைரே செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.