மணிப்பூரில் சக்திவாய்ந்த வெடிகுண்டு வெடித்தது; போலீஸார் தீவிர விசாரணை
மணிப்பூர் தலைநகரான இம்பாலில் இன்று காலை சக்தி வாய்ந்த வெடிகுண்டு வெடித்தது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மணிப்பூர் தலைநகரான இம்பாலில் இன்று காலை சக்தி வாய்ந்த வெடிகுண்டு வெடித்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இம்பால் நகரின் மேற்கே நாகமபால் ரிம்ஸ் சாலை அருகே இன்று காலை சக்தி வாய்ந்த வெடிகுண்டு ஒன்று திடீரென வெடித்தது. தகவலறிந்த போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர். வெடிகுண்டு வைத்தவர் யார் என்பது குறித்த தகவல் இதுவரை வெளியாகவில்லை. மேலும், இந்த சம்பவத்தில் உயிரிழப்புகள் ஏதுமிலை எனத் தகவல் வெளியாகியுள்ளது. போலீஸாரின் விசாரணை நடைபெற்று வருகிறது.
முன்னதாக, கடந்த டிசம்பர் மாத இறுதியிலும் இம்பாலில் மார்க்கெட் அருகே வெடிகுண்டு வெடித்தது குறிப்பிடத்தக்கது. தொடர் சம்பவங்களால் அப்பகுதி மக்கள் பதற்றத்தில் உள்ளனர்.