முகப்பு
இந்தியா

தில்லி வானிலை: அடுத்த வாரம் மழைக்கு வாய்ப்பு

தேசிய தலைநகரில் சனிக்கிழமை அன்று வெயில் நாளாக அமைந்தது.  பனி குறைந்து,

Updated On : 25 ஜனவரி, 2020 at 11:08 AM
கோப்புப் படம்
பகிர்:

தேசிய தலைநகரில் சனிக்கிழமை அன்று வெயில் நாளாக அமைந்தது.  பனி குறைந்து, 5 டிகிரிக்கு கீழ் வந்தது. செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் வானம் மழைமூட்டத்துடன் லேசான மழையுடன் இருக்கும் என்று முன்னறிவிக்கப்பட்டது.

வெள்ளிக்கிழமை முதல் லேசான காற்று வீசுவதால் காற்றின் தரம் 'மிகவும் மோசமானது' என்பதிலிருந்து 'மோசம்' எனும் வகைக்குள் வந்து சற்று மேம்பட்டது.

குறைந்தபட்ச வெப்பநிலை 4.8 டிகிரி செல்சியஷாக பதிவாகியுள்ளது, அதிகபட்சம் 21 டிகிரி வரை வர வாய்ப்புள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Advertisement

சனிக்கிழமையன்று வட இந்தியாவின் பல பகுதிகளில் கடுமையான பனிமூட்டம் காரணமாக குறைந்தது 21 ரயில்கள் தாமதமாக வந்தன.

மையம் நடத்திய காற்றின் தரம் மற்றும் வானிலை முன்னறிவிப்பு அமைப்பு (சஃபர்) அறிக்கையின்படி, தில்லியின் ஒட்டுமொத்த காற்றின் தரக் குறியீடு (AQI) 208 இல் 'மோசம்'அதாவது 208 ஆகவும், பிம் எம்10 உடன் 118 ஆகவும், பி எம் 2.5 63 ஆகவும் இருந்தது. பின்னர் தில்லியில் உள்ள ஏர் குவாலிட்டி இண்டெக்ஸ் அறிக்கையின் படி மேலும் முன்னேற்றம் இருப்பதாக சஃபர் கூறியது.

ஆனால் காற்றின் தரம் ஞாயிற்றுக்கிழமை மோசமடைய வாய்ப்புள்ளது என்று கூறியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.