பீம் ஆர்மி தலைவர் சந்திரசேகர் ஆஸாத் ஹைதராபாத்தில் கைது (விடியோ)
ஹைதராபாத்தில் குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கு (என்ஆர்சி) எதிரான போராட்டத்தில் பங்கேற்கவிருந்த பீம் ஆர்மி தலைவர் சந்திரசேகர் ஆஸாத் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஹைதராபாத்தில் குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கு (என்ஆர்சி) எதிரான போராட்டத்தில் பங்கேற்கவிருந்த பீம் ஆர்மி தலைவர் சந்திரசேகர் ஆஸாத் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த கைது நடவடிக்கை குறித்து ஹைதராபாத் காவல் துறையினர் தெரிவிக்கையில்,
"குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்கச் சென்றதால் ஆசாத் கைது செய்யப்பட்டுள்ளார். போராட்டம் நடைபெறும் இடத்தில் போராட்டத்தை நடத்த போராட்டக்காரர்கள் காவல் துறையிடம் இருந்து உரிய அனுமதியைப் பெறவில்லை" என்றனர்.
முன்னதாக, கடந்த ஆண்டு டிசம்பர் 20-ஆம் தேதி தில்லி ஜாமா மசூதி அருகே குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து நடைபெற்ற போராட்டத்தின் போது மக்களை வன்முறைக்குத் தூண்டியதாக குற்றஞ்சாட்டப்பட்ட ஆஸாத், காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார். இதன்பிறகு, தில்லி நீதிமன்றம் அவரை ஜாமீனில் விடுவித்து உத்தரவிட்டது.