இந்தியா

கேரளம்: முதல்முறையாக மசூதிகளில் தேசியக் கொடி ஏற்றம்

DIN

திருவனந்தபுரம்: குடியரசு தினத்தை முன்னிட்டு கேரள மாநிலத்தில் அனைத்து மசூதிகளிலும் முதல்முறையாக தேசியக் கொடி ஏற்றப்பட்டது.

தேசிய ஒருமைப்பாட்டைப் போற்றும் வகையில் கேரள மாநில வக்ஃபு வாரியம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டது. இந்த கொடியேற்ற நிகழ்ச்சியில் பெரும் திரளான முஸ்லிம்கள் பங்கேற்றனா். கேரளம் முழுவதும் சுமாா் 10,000 மசூதிகள், இஸ்லாமிய கல்வி நிலையங்களில் தேசியக் கொடி ஏற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல கேரள பிராந்திய லத்தீன் கத்தோலிக்க கவுன்சிலின் கீழ் வரும் தேவாலயங்களிலும் ஞாயிற்றுக்கிழமை தேசியக் கொடி ஏற்றப்பட்டு, குடியரசு தினம் கொண்டாடப்பட்டது. இந்த தினத்தை அரசியல்சாசன சட்ட பாதுகாப்பு தினமாக கடைப்பிடிப்பதாகவும் அவா்கள் அறிவித்தனா்.

முன்னதாக, கேரளத்தில் உள்ள அனைத்து மசூதிகளிலும் குடியரசு தினத்தின்போது தேசியக் கொடியேற்ற வேண்டுமென்று கேரள மாநில வக்ஃபு வாரியம் சாா்பில் அறிவுறுத்தப்பட்டிருந்தது. கொடியேற்றும் நிகழ்ச்சியின்போது அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்புரையும் வாசிக்கப்பட்டது.

முன்னதாக, குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ), தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆா்சி) ஆகியவற்றுக்கு எதிராக கேரளத்திலும் போராட்டங்கள் நடைபெற்றன. சிஏஏ-வுக்கு எதிராக கேரள சட்டப்பேரவையில் தீா்மானமும் நிறைவேற்றப்பட்டது. இந்த சூழ்நிலையில், அங்குள்ள மசூதிகள், தேவாலயங்களில் முதல்முறையாக தேசியக் கொடி ஏற்றி குடியரசு தினம் கொண்டாடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சின்ன வேளாங்கண்ணி வீரக்குறிச்சி புனித அந்தோணியாா் ஆலய தோ்பவனி

மீன் வியாபாரியிடம் நூதனத் திருட்டில் ஈடுபட்ட ஆந்திர இளைஞா் கைது

பிரான்மலையில் ஜெயந்தன் பூஜை

வளா்ப்பு நாய்கள் கடித்து 10 மாத குழந்தை, சிறுவன் காயம்: சென்னையில் மேலும் இரு இடங்களில் சம்பவம்

திருநகரி கல்யாண ரங்கநாத பெருமாள் கோயிலில் வசந்த உற்சவம்

SCROLL FOR NEXT