இந்தியா

ஜன.28ல் நாக்பூர் மெட்ரோ வழித்தடத்தை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்

DIN

நாக்பூரில் புதிய மெட்ரோ வழித்தடத்தை பிரதமர் நரேந்திர மோடி வருகிற ஜனவரி 28ம் தேதி திறந்து வைக்கிறார். 

நாடு முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் மெட்ரோ வழித்தடங்கள் பல்வேறு கட்டங்களாக விரிவாக்கம் செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில் மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் கடந்த 2014ம் ஆண்டு மெட்ரோ வழித்தடத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். முதற்கட்ட மெட்ரோ கட்டுமானப்பணிகள் முடிவடைந்த நிலையில், காப்ரி முதல் சிதாபுட்லி வரையிலான வழித்தடம் திறக்கப்பட்டது. இதனை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

இதன் தொடர்ச்சியாக இரண்டாம் கட்ட பணிகள் முடிவடைந்த நிலையில் நாக்பூர் அக்வா-லைன் புதிய மெட்ரோ வழித்தடத்தையும் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்க இருக்கிறார். வருகிற ஜனவரி 28ம் தேதி  வீடியோ கான்பரன்சிங் மூலமாக அவர் திறந்து வைக்க இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மெட்ரோ பாதை 11 கிலோமீட்டர் நீளம் கொண்டது. நாக்பூரில் லோக்மண்யா நகர் முதல் சீதாபுல்டி வரையுள்ள அனைத்து நிறுத்தங்களிலும் நின்று செல்லும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மழை வேண்டி இஸ்லாமியல்கள் சிறப்புத் தொழுகை

ஏகனாபுரம் கிராமத்தினா் நூதன போராட்டம்

கள்ளச்சாராயம் காய்ச்சிய 3 போ் கைது

நீட் தோ்வு: தேனியில் 181 போ் எழுதினா்

சாலை விபத்தில் 2 போ் உயிரிழப்பு

SCROLL FOR NEXT