முகப்பு
இந்தியா

ஜேடியு-வில் இருந்து பிரசாந்த் கிஷோர் நீக்கம்

ஐக்கிய ஜனதா தளத்தில் (ஜேடியு) இருந்து பிரசாந்த் கிஷோர் இன்று (புதன்கிழமை) நீக்கப்பட்டுள்ளார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 3:39 PM
பகிர்:

ஐக்கிய ஜனதா தளத்தில் (ஜேடியு) இருந்து பிரசாந்த் கிஷோர் இன்று (புதன்கிழமை) நீக்கப்பட்டுள்ளார்.

இந்தியாவில் தேர்தல் வியூக நிபுணர்களில் முக்கியமானவர் பிரசாந்த் கிஷோர். இவர் பிகாரில் நிதீஷ் குமார் தலைமையிலான ஜேடியு-வின் துணைத் தலைவராக இருந்தார். 

இதனிடையே, குடியுரிமை திருத்தச் சட்ட (சிஏஏ) விவகாரத்தில் நிதீஷ் குமாரின் நிலைப்பாடு குறித்து பிரசாந்த் கிஷோர் மற்றும் பவன் குமார் தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்தனர். இந்த விவகாரம் தொடர்பாக பிரசாந்த் கிஷோர் தொடர்ந்து கட்சியின் நிலைப்பாட்டுக்கு மாறுபட்ட கருத்தையே வெளிப்படுத்தி வந்தார்.

இந்நிலையில், பிரசாந்த் கிஷோர் மற்றும் பவன் குமார் ஆகியோர் கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கூறி ஜேடியு-வில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

இதையடுத்து, பிரசாந்த் கிஷோர் தனது சுட்டுரைப் பதிவில்,

"நன்றி நிதீஷ் குமார். பிகாரின் முதல்வர் நாற்காலியைத் தக்கவைத்துக்கொள்ள எனது வாழ்த்துகள்" என்று குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, பிரசாந்த் கிஷோர் குறித்து நிதீஷ் குமார் நேற்று செய்தியாளர்களிடம் பேசுகையில்,

"அமித் ஷா சொல்லித்தான் பிரசாந்த் கிஷோரை ஜேடியு-வில் இணைத்தேன். யாருக்கு எங்கு போக வேண்டுமோ அங்கு போகட்டும்" என்று தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.