இந்தியா

கூகுளிடம் தனது வயதைக் 'குறைக்க' கேட்ட நடிகை

மூத்த நடிகை நீனா குப்தா தனது புதிய ஹேர்ஸ்டைலை தனது டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். பின்னர் ஆன்லைனில் தனது வயதை "குறைக்க" கூகிள் கோரினார்.

IANS

மூத்த நடிகை நீனா குப்தா தனது புதிய ஹேர்ஸ்டைலை தனது டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். பின்னர் ஆன்லைனில் தனது வயதை "குறைக்க" கூகிளிடம் கோரினார்.

தனது அடுத்தப் படமான "சுப் மங்கல் ஜியாடா சவ்தான்" வெளியீட்டிற்கு தயாராகி வரும் 60 வயதான நீனா, புதன்கிழமை காலை தனது புதிய ஹேர்கட் புகைப்படத்தை டிவிட்டரில் பகிர்ந்தார். 

அந்தப் புகைப்படத்திற்கு வித்யாசமான தலைப்பைக் கொடுத்து, நீனா எழுதினார்: "கூகிள் வாலோ அப் தோ மெரி உமர் காம் கர்கே லைக் டூ (கூகிள் இப்போதாவது என் வயதைக் குறைக்க மாட்டாயா)! எனக்கு ஹேர்கட் செய்ததற்கு நன்றி காந்தா மோட்வானி." என்று பதிவிட்டிருந்தார்.

ஆயுஷ்மான் குர்ரானாவின் 2017-ஆம் ஆண்டின் வெற்றிபெற்ற "சுப் மங்கல் சவ்தன்" படத்தின் அடுத்த பாகம்தான் "சுப் மங்கல் ஜியாடா சவ்தன்". இந்த படத்தில் ஆயுஷ்மான் மற்றும் ஜிதேந்திரா ஓரின சேர்க்கையாளர்களாக நடிக்கிறார்கள். இதில் கஜ்ராஜ் ராவும் நடிக்கிறார்.

படம் பிப்ரவரி 21-ஆம் தேதி வெளியாக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேகம்... ரித்திகா நாயக்!

திஷா பதானியின் வீட்டிற்கு வெளியே துப்பாக்கிச் சூடு! குற்றவாளிகள் சுட்டுக்கொலை!

அமெரிக்க வரி விதிப்பால் ஆட்டோமொபைல் உதிரிபாக உற்பத்தி 8% பாதிப்பு!

பில் சால்ட் அதிரடி: டி20 தொடரை வெற்றியுடன் தொடங்கிய இங்கிலாந்து!

அன்பே வலிமையின் ஆதாரம்: வாழ்த்துகளுக்கு நன்றி கூறிய பிரதமர்!

SCROLL FOR NEXT