முகப்பு
இந்தியா

கடும் மூடுபனி காரணமாக தில்லியில் 20 ரயில்கள் தாமதம்

வட இந்தியாவின் பல பகுதிகளில் மூடுபனி நிலை தொடர்ந்து வரும் நிலையில், தில்லிக்கு புறப்படும் 20 ரயில்கள் தாமதமாக புறப்பட்டதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 3:40 PM
பகிர்:

வட இந்தியாவின் பல பகுதிகளில் மூடுபனி நிலை தொடர்ந்து வரும் நிலையில், தில்லிக்கு புறப்படும் 20 ரயில்கள் தாமதமாக புறப்பட்டதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். 

தலைநகா் தில்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடுங் குளிா், மூடுபனி தொடர்ந்து காணப்படுகிறது. இதன் காரணமாக விமானங்கள் மற்றும் ரயில்களின் சேவை தொடர்ச்சியாக பாதிக்கப்படுவதால் மக்கள் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். 

இன்றும் தில்லியில் இருந்து 20 ரயில்கள் தாமதமாக புறப்பட்டுள்ளன. வடக்கு ரயில்வே அதிகாரிகளின் கூற்றுப்படி, திப்ருகார்-தில்லி பிரம்மபுத்ரா மெயில் ரயில் மூன்று மணி நேரம் தாமதமானது. அதன்பிறகு கயா-புது தில்லி மகாபோதி எக்ஸ்பிரஸ் இரண்டரை மணி நேரங்கள் தாமதமானது. 

புரி-புது தில்லி புருஷோத்தம் எக்ஸ்பிரஸ், அசாம்கர்-தில்லி கஃபியத் எக்ஸ்பிரஸ், ஹவுரா-புது தில்லி பூர்வா எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரயில்கள் இரண்டு மணி நேரம் தாமதமானது.

கான்பூர்-புது தில்லி ஷ்ரம் சக்தி எக்ஸ்பிரஸ், புவனேஷ்வர்-புது தில்லி டொரான்டோ எக்ஸ்பிரஸ் மற்றும் ரேவா-ஆனந்த் விஹார் ரேவா எக்ஸ்பிரஸ் ஆகியவை ஒரு மணி நேரம் 30 நிமிடங்கள் தாமதமாக வந்தன. 

முழு கட்டுரையைப் படிக்க →