இந்தியா

நிர்பயா குற்றவாளிகளின் தூக்குத் தண்டனையை நிறுத்திவைக்கக் கோரி புதிய மனு தாக்கல்

வருகிற பிப்ரவரி 1ம் தேதி நிர்பயா குற்றவாளிகளுக்கு நிறைவேற்றப்படவுள்ள தூக்குத் தண்டனையை நிறுத்திவைக்கக்கோரி தில்லி உயர்நீதிமன்றத்தில் புதிய மனு ஒன்று  செய்யப்பட்டுள்ளது.

DIN

வருகிற பிப்ரவரி 1ம் தேதி நிர்பயா குற்றவாளிகளுக்கு நிறைவேற்றப்படவுள்ள தூக்குத் தண்டனையை நிறுத்திவைக்கக்கோரி தில்லி உயர்நீதிமன்றத்தில் இன்று புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

2012, டிசம்பா் 16 நள்ளிரவில் ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவி நிர்பயா 6 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு பேருந்திலிருந்து தூக்கி வீசப்பட்டார். படுகாயமடைந்த அவர் சிங்கப்பூா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 6 பேரில் ராம் சிங் என்பவா் தில்லி திகாா் சிறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். வழக்கில் தொடா்புடைய மற்றொருவா் சிறாா் பிரிவின் கீழ் வந்ததால், வழக்கு சிறாா் நீதிமன்றத்தில் நடத்தப்பட்டு மூன்று ஆண்டுகள் சிறார் சீர்திருத்த இல்லத்திற்கு அனுப்பப்பட்டு மூன்று ஆண்டுகளுக்கு பின்னர் விடுவிக்கப்பட்டார். 

இறுதியாக, மீதியுள்ள நால்வருக்கும் பிப்ரவரி 1ம் தேதி தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது. முன்னதாக குற்றவாளிகளின் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில், தில்லி நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட  பல்வேறு மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. 

இந்நிலையில், நிர்பயா குற்றவாளிகள் தரப்பு வழக்கறிஞர் ஏ.பி.சிங் இன்று புதிய மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அவர் தனது மனுவில், 'குற்றவாளிகளின் சில சட்ட நடைமுறைகள் இன்னும் முடியாததால் அவர்களின் தூக்குத் தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும்' என்று கேட்டுள்ளார்.

மேலும், இவ்வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கவே, இன்றைய தினமே இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள நீதிமன்றத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அரசன் தரமாக இருக்கும்: கவின்

என்றும் என் கைகளில்..! ஹர்மன்ப்ரீத், ஸ்மிருதி மந்தனாவின் ‘ஸ்பெஷல்’ டாட்டூ!

சாலேட் ஹோட்டல் ஒருங்கிணைந்த லாபம் ரூ.154.81 கோடி!

2026ல் திமுக - தவெக இடையே மட்டும்தான் போட்டி: விஜய்

பிக் பாஸ் 9 பிராங்க்: முகத்திரை கிழிந்த போட்டியாளர்கள் - உள்ளத்தால் உயர்ந்த வினோத்!

SCROLL FOR NEXT