முகப்பு
இந்தியா

ஒடிசா அரசு அதிகாரியிடம் இருந்து ரூ.11.73 லட்சம் லஞ்சப் பணம் பறிமுதல்

ஒடிசா மாநிலத்தில் மூத்த வேளாண்துறை அரசு அதிகாரியிடம் இருந்து ரூ.11.73 லட்சத்தை லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

Updated On : 2 ஜூலை, 2020 at 6:15 PM
ஒடிசா அரசு அதிகாரியிடம் இருந்து ரூ.11.73 லட்சம் லஞ்சப் பணம் பறிமுதல்
பகிர்:


புவனேஸ்வரம்: ஒடிசா மாநிலத்தில் மூத்த வேளாண்துறை அரசு அதிகாரியிடம் இருந்து ரூ.11.73 லட்சத்தை லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

ஒடிசாவில், ஒரே நபரிடம் இருந்து இந்த அளவுக்கு லஞ்சப் பணத்தை பறிமுதல் செய்திருப்பது இதுவே முதல் முறை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோராபுட் மண்டலத்தின் வேளாண்துறை உதவி இயக்குநர் பிரதீப் குமார் மொஹாந்தியிடம் விசாரணை நடத்திய லஞ்ச ஒழிப்புத் துறையினர், அவரிடம் இருந்து 11.73 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்தனர். அந்தப் பணம் எதற்காக பெறப்பட்டது என்று கேட்டதற்கு அவரிடம் இருந்து எந்த முறையான தகவலும் கிடைக்கப்பெறவில்லை.

Advertisement

இதையடுத்து, வழக்குப் பதிவு செய்து, லஞ்ச ஒழிப்புத் துறையினர் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.