ராஜ்நாத் சிங்கின் லடாக் பயணம் ஒத்திவைப்பு
மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், வெள்ளிக்கிழமை லடாக் பகுதிக்கு பயணம் மேற்கொள்வதாக இருந்த நிலையில், அந்தப் பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்தியாராஜ்நாத் சிங்கின் லடாக் பயணம் ஒத்திவைப்பு
மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், வெள்ளிக்கிழமை லடாக் பகுதிக்கு பயணம் மேற்கொள்வதாக இருந்த நிலையில், அந்தப் பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
புது தில்லி: மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், வெள்ளிக்கிழமை லடாக் பகுதிக்கு பயணம் மேற்கொள்வதாக இருந்த நிலையில், அந்தப் பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சரின் பயணம் ஒத்திவைக்கப்பட்டதற்கான காரணம் உடனடியாக தெரிவிக்கப்படவில்லை.
கடந்த ஏழு வாரங்களுக்கும் மேலாக, இந்திய - சீனப் படைகள் முகாமிட்டு, பதற்றத்தை ஏற்படுத்தி வரும் லடாக் பகுதிக்கு, விரைவில் ராஜ்நாத் சிங் செல்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எல்லைப் பகுதியில் பதற்றம் அதிகரித்த நிலையில், கடந்த ஜூன் 23-ம் தேதி ராணுவ தலைமைத் தளபதி எம்எம் நரவணே லடாக் பகுதிக்கு இரண்டு நாள் பயணம் மேற்கொண்டு, அங்குள்ள நிலைமைகளை நேரில் ஆய்வு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.