முகப்பு
இந்தியா

தொல்லியல் துறையின் கீழ் இருக்கும் சுற்றுலாத் தளங்கள் ஜூலை 6-ல் திறப்பு

இந்திய தொல்லியல் துறையின் கீழ் இருக்கும் அனைத்து புகழ்பெற்ற தளங்களும் ஜூலை 6-ம் தேதி முதல் திறக்கப்படும் என்று மத்திய கலாசாரத் துறை அமைச்சர் பிரகலாத் சிங் படேல் தெரிவித்துள்ளார்.

Updated On : 3 ஜூலை, 2020 at 3:09 PM
சுற்றுலாத் தளங்கள் ஜூலை 6-ல் திறப்பு
பகிர்:


இந்திய தொல்லியல் துறையின் கீழ் இருக்கும் அனைத்து புகழ்பெற்ற தளங்களும் ஜூலை 6-ம் தேதி முதல் திறக்கப்படும் என்று மத்திய கலாசாரத் துறை அமைச்சர் பிரகலாத் சிங் படேல் தெரிவித்துள்ளார்.

அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும். அதிக சுற்றுலாப் பயணிகள் வரும் தளங்களில், பார்வையாளர்கள் கட்டுப்பாடுகளுடனே அனுமதிக்கப்படுவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மார்ச் மாதம் கரோனா தொற்றுப் பரவத்தொடங்கிய போது மூடப்பட்ட தாஜ் மகால், செங்கோட்டை உள்ளிட்ட புகழ்பெற்ற சுற்றுலாத் தளங்கள் முதல் முறையான ஜூலை 6-ம் தேதி திறக்கப்பட உள்ளது.

Advertisement

நாள்தோறும் இந்த சுற்றுலாத் தலங்களில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே சுற்றுலாப் பயணிகளை அனுமதிக்கப்படுவார்கள் என்றும், அவர்களுக்கும் நேரக் கட்டுப்பாடு விதிக்கப்படும் என்றும் தெரிகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.