உ.பி. மோடி நகர் தொழிற்சாலையில் தீ விபத்து: 7 பேர் பலி
உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத்தின் மோடி நகரில் உள்ள ஒரு தொழிற்சாலையில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 4 பேர் காயமடைந்துள்ளனர்.
உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத்தின் மோடி நகரில் உள்ள ஒரு தொழிற்சாலையில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 4 பேர் காயமடைந்துள்ளனர்.
காசியாபாத் மாவட்ட மாஜிஸ்திரேட் அஜய் சங்கர் பாண்டே இத்தகவலை உறுதி செய்துள்ளார்.
மேலும் உயிரிழந்தவர்களில் ஒரு குழந்தை மற்றும் பெண்களும் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தொடர்ந்து, உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு இரங்கல் தெரிவித்ததுடன் காசியாபாத் மாவட்ட மாஜிஸ்திரேட் மற்றும் மாவட்ட எஸ்.பி. ஆகியோரை சம்பவ இடத்துக்குச் சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.