முகப்பு
இந்தியா

ஜம்மு-காஷ்மீரில் குண்டுவெடிப்பு: பாதுகாப்புப் படை வீரர் படுகாயம்

ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்த குண்டுவெடிப்பில் பாதுகாப்புப்படை வீரர் ஒருவர் காயமுற்றார். 

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:53 PM
ஜம்மு-காஷ்மீரில் குண்டுவெடிப்பு: பாதுகாப்புப் படை வீரர் படுகாயம்
பகிர்:

ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்த குண்டுவெடிப்பில் பாதுகாப்புப்படை வீரர் ஒருவர் காயமுற்றார். 

தெற்கு காஷ்மீரின் புல்வாமாவின் கோங்கூ பகுதியில் இன்று காலை பாதுகாப்புப் படையினர் அவ்வழியாக சென்று கொண்டிருந்த நிலையில் குண்டுவெடிப்பு நிகழ்ந்ததுள்ளது. ராணுவ வீரர்களின் வாகனங்களை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என்று காவல்துறை அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

குறைந்த தீவிரம் கொண்ட ஐ.இ.டி குண்டுவெடிப்பு என்பதால் உயிரிழப்பு எதுவும் நிகழாவில்லை. ஒருவருக்கு கையில் காயமுற்ற நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.