இந்தியா

ராகுல் காந்தி வேலை செய்வதில்லை; ஆனால் கிளர்ச்சியை ஏற்படுத்துகிறார்: அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி

DIN

ராகுல் காந்தி வேலை செய்வதில்லை என்றும் தொடர்ந்து கிளர்ச்சியை ஏற்படுத்துவதாகவும் மத்திய அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி குற்றஞ்சாட்டியுள்ளார். 

பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசின் பல்வேறு முடிவுகள், கருத்துகள் குறித்து காங்கிரஸ் கட்சி தங்களது எதிர்ப்பை பதிவு செய்து வருகிறது. கரோனா வைரஸ் தடுப்புப் பணிகள், சீனா விவகாரம் என இது தொடர்ந்து வருகிறது. 

இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து கிளர்ச்சியை ஏற்படுத்தி வருகிறார். மாறாக அவர் எந்த வேலையும் செய்வதில்லை என்று மத்திய சிறுபான்மையினர் விவகாரத்துறை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி தெரிவித்துள்ளார். 

மேலும், பாதுகாப்பு தொடர்பான நிலைக்குழு கூட்டங்களில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இதுவரை பங்கேற்றதில்லை என்றும் குற்றஞ்சாட்டிய அவர், 'எதிர்மறை நிறைந்த ஒரு நபர் அனைத்தையும் எதிர்மறையாகவே பார்ப்பார். இதனாலே அவர் மத்திய அரசின் அனைத்து முடிவுகளையும் எதிர்த்து வருகிறார். விவசாயம், விளையாட்டு, பெண்கள் உரிமைகள் மற்றும் வணிகம் உள்ளிட்ட துறைகளில் செய்யப்படும் சீர்திருத்தங்களை அவர் பார்க்கத் தவறிவிடுகிறார்' என்று கூறினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கொடூர தாக்குதல்!

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

இன்று யாருக்கு அதிர்ஷ்டம்?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

உதகையில் இ-பாஸ் நடைமுறை: பொதுமக்கள் வரவேற்பு

SCROLL FOR NEXT