முகப்பு
இந்தியா

தில்லியில் நாள்தோறும் கரோனாவால் பாதிக்கப்படுவோரை விட குணமடைவோர் அதிகம்

நாள்தோறும் கரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களைக் காட்டிலும் கரோனாவில் இருந்து குணமடைவோர் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாக தில்லி அரசு வெளியிட்ட புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:56 PM
தில்லியில் நாள்தோறும் கரோனாவால் பாதிக்கப்படுவோரை விட குணமடைவோர் அதிகம்
பகிர்:


புது தில்லி: தலைநகர் தில்லியில் ஜூலை மாதத்தில் கடந்த 12 நாள்களாக நாள்தோறும் கரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களைக் காட்டிலும் கரோனாவில் இருந்து குணமடைவோர் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாக தில்லி அரசு வெளியிட்ட புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

ஜூலை 1 முதல் 12-ம் தேதி வரை தில்லியில் 25,134 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதே சமயம் இந்த காலக்கட்டத்தில் 31,640 பேர் கரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர்.

ஜூலை 1 முதல் 6 வரை நாள்தோறும் கரோனாவில் இருந்து குணமடைவோர் எண்ணிக்கை, பாதிக்கப்படும் நபரை விட அதிகமாகவே இருந்துள்ளது.

இந்தக் காலக்கட்டத்தில் 6 நாள்களுக்கு கரோனாவில் இருந்து குணமடைவோர் எண்ணிக்கை 2,000 ஆகவும், 3 நாள்கள் 3 ஆயிரமாகவும், ஒரு நாள் 4 ஆயிரமாகவும் இருந்துள்ளது.

ஒட்டுமொத்தமாக ஜூலை 12 வரை தில்லியில் கரோனாவில் இருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 89,968 ஆகவும், கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 1,12,494 ஆகவும் உள்ளது.
ஜூலை 1ம் தேதி 1,644 பேர் குணமடைந்த நிலையில், அடுத்த நாளே அது 3 ஆயிரமாக உயர்ந்தது. ஜூலை 6ம் தேதி தில்லியில் கரோனா பாதிப்பு ஒரு லட்சத்தை எட்டிய நாளன்று 749 பேர் குணமடைந்தனர். ஆனால் அதற்கு அடுத்த நாள் 2,129 பேர் குணமடைந்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.