முகப்பு
இந்தியா

அமர்நாத் யாத்திரையை ரத்து செய்யக் கோரிய மனுவை நிராகரித்தது உச்ச நீதிமன்றம்

கரோனா வைரஸ் தொற்றுப் பரவலைக் காரணம் காட்டி, அமர்நாத் யாத்திரையை ரத்து செய்யக் கோரி தொடரப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.

Updated On : 13 ஜூலை, 2020 at 4:16 PM
கோப்புப் படம்
பகிர்:


புது தில்லி: கரோனா வைரஸ் தொற்றுப் பரவலைக் காரணம் காட்டி, அமர்நாத் யாத்திரையை ரத்து செய்யக் கோரி தொடரப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.

அமர்நாத் யாத்திரையை ரத்து செய்யுமாறு உத்தரவிடவும், அமர்நாத் பனிலிங்கத்தை இணையதளம் மற்றும் தொலைக்காட்சி வாயிலாக ஒளிபரப்ப உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் பொது நலன் மனு தாக்கல் செய்யப்பட்டது.

ஆனால், இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தலையிட விரும்பவில்லை என்றும், அமர்நாத் பனி லிங்க தரிசனத்தை செயல்படுத்துவது அப்பகுதியின் உள்ளாட்சி அமைப்புகளின் பணியாகும். உள்ளாட்சி அமைப்பின் செயல்பாட்டில் தலையிட உச்ச நீதிமன்றம் விரும்பவில்லை. அமர்நாத் பனிலிங்க தரிசனம் தொடர்பாக, உள்ளாட்சி அமைப்பே முடிவெடுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துவிட்டது.
 

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.