மேற்கு வங்கத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் எம்எல்ஏ உடல்; சிபிஐ விசாரணை கோரும் பாஜக
மேற்கு வங்க மாநிலத்தில் தனது வீட்டுக்கு அருகே மூடப்பட்டிருந்த தேநீர் கடையில் தூக்கில் தொங்கிய நிலையில் பாஜக எம்எல்ஏ தபேந்திர நாத் ராய் உடல் மீட்கப்பட்டது குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று பா
மேற்கு வங்க மாநிலத்தில் தனது வீட்டுக்கு அருகே மூடப்பட்டிருந்த தேநீர் கடையில் தூக்கில் தொங்கிய நிலையில் பாஜக எம்எல்ஏ தபேந்திர நாத் ராய் உடல் மீட்கப்பட்டது குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று பாஜக வலியுறுத்தியுள்ளது.
தபேந்திர நாத் ராய் கொலை செய்யப்பட்டு தூக்கில் தொங்கவிடப்பட்டிருக்க வேண்டும் என்றும், இது குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவரது குடும்பத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.
சம்பவம் குறித்து தபேந்திர நாத்தின் குடும்பத்தினர் கூறுகையில், அவர் அதிகாலை 1 மணியளவில் அவருக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அப்போது அவர் வீட்டில் இருந்து புறப்பட்டு வெளியே சென்றார். ஆனால் அதன் பிறகு அவர் வீட்டுக்குத் திரும்பி வரவில்லை. இன்று காலையில், வீட்டுக்கு அருகே இருக்கும் ஒரு தேநீர் கடையில், அவரது உடல் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டதாகவும், அவரது கைகள் கட்டப்பட்டிருந்ததாகவும் கூறுகிறார்கள்.
இது கொலைதான். இது குறித்து சிபிஐ விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.
எம்எல்ஏவுன் உடல் உடற்கூறு ஆய்வுக்காக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது. இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். உடற்கூறு ஆய்வு முடிவுகளுக்காக காவல்துறையினர் காத்திருக்கின்றனர் என்று மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
மேலும், தபேந்திர நாத் மரணம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று மேற்கு வங்க பாஜக தலைவர் திலிப் கோஷ் வலியுறுத்தியுள்ளார்.