முகப்பு
இந்தியா

சக ஊழியைக்கு பாலியல் தொல்லை: மருத்துவரைத் தாக்கிய செவிலியர்கள்!

ஹரியாணா மாநிலத்தில் சக ஊழியைக்கு பாலியல் தொல்லை கொடுத்த அரசு மருத்துவரை செவிலியர்கள்  தாக்கிய சம்பவம் நடந்துள்ளது.  

Updated On : 14 ஜூலை, 2020 at 7:02 PM
ஹரியாணா மாநிலத்தில் சக ஊழியைக்கு பாலியல் தொல்லை கொடுத்த அரசு மருத்துவரை செவிலியர்கள்  தாக்கிய சம்பவம் நடந்துள்ளது.
பகிர்:

சண்டிகர்: ஹரியாணா மாநிலத்தில் சக ஊழியைக்கு பாலியல் தொல்லை கொடுத்த அரசு மருத்துவரை செவிலியர்கள்  தாக்கிய சம்பவம் நடந்துள்ளது.  

ஹரியாணா மாநிலத்தின் பஞ்ச்குலா நகரில் அரசு மருத்துவமனை ஒன்று செயல்பட்டு வருகிறது . இங்கு மனநல மருத்துவராக மனோஜ்குமார் என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் கடந்த சனிக்கிழமையன்று மருத்துவமனையில் கரோனா தொற்றால் தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கான வார்டில் இரவுப்பணியில் இருந்த செவிலியர் ஒருவருக்கு பாலியல் தொல்லைகள் கொடுத்து, அவரிடம் தவறாக நடந்துள்ளார். இதுதொடர்பாக அந்த செவிலியர் சக ஊழியர்களிடம் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் சம்பவத்திற்குப் பிறகு செவ்வாயன்று மனோஜ்குமார் முதன்முறையாக மருத்துவமனைக்கு வந்தபோது, செவிலியர்கள் அவரைச் சூழ்ந்து கொண்டு தாக்கினர். இந்தக் காட்சிகள் அங்கிருந்த கண்காணிப்புக் கேமராவில் பதிவாகியுள்ளன.

Advertisement

இதையடுத்து ஏற்கனவே அளிக்கப்பட்ட புகாரின் பேரில் போலீசார் அவரைக் கைது செய்து அவர் மீது வழக்குத் தொடுத்துள்ளனர். மாநில மகளிர் ஆணையமும் இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.