முகப்பு
இந்தியா

பிகாரில் ஜூலை 16 முதல் மீண்டும் பொதுமுடக்கம்; பாஜக தலைவர்கள் 75 பேருக்கு கரோனா

பிகார் மாநிலத்தில் கரோனா தொற்று வேகமாகப் பரவி வரும் நிலையில், அந்த மாநிலத்தில் ஜூலை 16 முதல் 31 வரை மீண்டும் பொது முடக்கம் அமல்படுத்தப்படுகிறது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:56 PM
பிகாரில் ஜூலை 16 முதல் மீண்டும் பொதுமுடக்கம்
பகிர்:


பாட்னா: பிகார் மாநிலத்தில் கரோனா தொற்று வேகமாகப் பரவி வரும் நிலையில், அந்த மாநிலத்தில் ஜூலை 16 முதல் 31 வரை மீண்டும் பொது முடக்கம் அமல்படுத்தப்படுகிறது.

இந்த காலக்கட்டத்தில் அவசரகால உதவிகளும், அத்தியாவசிய சேவைகளும் மட்டுமே செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பாட்னாவில் பிகார் அரசின் முதன்மைச் செயலாளர் தலைமையில் இன்று நடைபெற்ற உயர்மட்டக் குழுக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, பிகார் மாநிலத்தைச் சேர்ந்த 75 பாஜக தலைவர்களுக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. பாட்னாவில் உள்ள பாஜக தலைமையகத்தில் நேற்று நூறுக்கும் மேற்பட்ட பாஜகவினருக்கும் தலைமையகத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. 100 பேருக்கு செய்யப்பட்ட பரிசோதனையில் 75 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.