முகப்பு
இந்தியா

ஆந்திரத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு கரோனா பாதிப்பு 2 ஆயிரத்தைத் தாண்டியது

ஆந்திர மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு கரோனா பாதிப்பு இரண்டு ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:56 PM
ஆந்திரத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு கரோனா பாதிப்பு 2 ஆயிரத்தைத் தாண்டியது
பகிர்:

ஆந்திர மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு கரோனா பாதிப்பு இரண்டு ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.

ஒரே நாளில் 2,432 பேருக்கு (20 பேர் இதர மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்)  கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை அடுத்து, மாநிலத்தில் மொத்த பாதிப்பு 35 ஆயிரத்தை எட்டிவிட்டது.

சுகாதாரத்துறை புதன்க்கிழமை வெளியிட்ட தகவலின்படி, 

இன்று ஒரே நாளில் இதுவரை இல்லாத அளவுக்கு கரோனா பாதித்து 44 பேர் பலியாகியுள்ளதை அடுத்து ஆந்திரத்தில் கரோனாவுக்கு பலியானோரின் எண்ணிக்கை 452 ஆக உயர்ந்துள்ளது.

ஆந்திர மாநிலத்தில் கடந்த சில நாள்களாக கரோனா பாதிப்பு நாள்தோறும் ஆயிரத்தைக் கடந்துவந்த நிலையில், இன்று சுமார் இரண்டாயிரத்து ஐநூறாக உயர்ந்துள்ளது. இதையடுத்து அந்த மாநிலத்தில் மொத்த பாதிப்பு 35,451 ஆக உள்ளது. 

நோய்த் தொற்று பாதிக்கப்பட்ட 16,621 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.