முகப்பு
இந்தியா

சச்சின் பைலட் உள்பட அதிருப்தி எம்எல்ஏ-க்களுக்கு ராஜஸ்தான் பேரவைத் தலைவர் நோட்டீஸ்

சச்சின் பைலட் உள்பட 19 அதிருப்தி எம்எல்ஏ-க்களுக்கு ராஜஸ்தான் பேரவைத் தலைவர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:56 PM
சச்சின் பைலட் உள்பட 19 அதிருப்தி எம்எல்ஏ-க்களுக்கு ராஜஸ்தான் பேரவைத் தலைவர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
பகிர்:

சச்சின் பைலட் உள்பட 19 அதிருப்தி எம்எல்ஏ-க்களுக்கு ராஜஸ்தான் பேரவைத் தலைவர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

ராஜஸ்தான் மாநிலத்தில் முதல்வர் அசோக் கெலாட் மற்றும் துணை முதல்வர் சச்சின் பைலட் இடையே பிரச்னை நிலவி வந்தது. இதைத் தொடர்ந்து திங்கள் மற்றும் செவ்வாயன்று நடத்தப்பட்ட காங்கிரஸ் சட்டப்பேரவைக் குழுக் கூட்டத்தில் சச்சின் பைலட் பங்கேற்கவில்லை. இதைத் தொடர்ந்து துணை முதல்வர் மற்றும் ராஜஸ்தான் காங்கிரஸ் மாநிலத் தலைவர் உள்ளிட்ட பதவிகளிலிருந்து சச்சின் பைலட் நீக்கப்பட்டார்.

அதேசமயம், கொறடா உத்தரவை மீறியும் சட்டப்பேரவைக் குழுக் கூட்டத்தில் பங்கேற்காததால், அதிருப்தி எம்எல்ஏ-க்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு தலைமை கொறடா பேரவைத் தலைவருக்கு கடிதம் எழுதியதாகத் தகவல் வெளியானது. 

இந்த நிலையில் சச்சின் பைலட் உள்பட 19 அதிருப்தி எம்எல்ஏ-க்களுக்கு நேற்று (செவ்வாய்க்கிழமை) நோட்டீஸ் அனுப்பப்பட்டதாக ராஜஸ்தான் பேரவைத் தலைவர் சிபி ஜோஷி பிடிஐ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →