முகப்பு
இந்தியா

கரோனா பரிசோதனை நாள் ஒன்றுக்கு 10 லட்சமாக உயர்த்தப்படும்: ஹர்ஷ்வர்தன்

அடுத்த மூன்று மாதங்களில் நாடு முழுவதும் கரோனா பரிசோதனை நாள் ஒன்றுக்கு 10 லட்சமாக உயர்த்தப்படும் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:57 PM
மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன்
பகிர்:


புது தில்லி: அடுத்த மூன்று மாதங்களில் நாடு முழுவதும் கரோனா பரிசோதனை நாள் ஒன்றுக்கு 10 லட்சமாக உயர்த்தப்படும் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன் கூறுகையில், நாட்டில் அடுத்து வரும் மூன்று மாதங்களில் நாள் ஒன்றுக்கு மேற்கொள்ளப்படும் கரோனா பரிசோதனையின் அளவு 10 லட்சமாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும். 
தற்போதைய நிலையில், நாட்டில் ஒட்டுமொத்தமாக நாள் ஒன்றுக்கு 3.25 லட்சம் மாதிரிகள் கரோனா பரிசோதனைக்கு உள்படுத்தப்படுகிறது. இதன் மூலம் புதிதாக கரோனா பாதிப்புகள் கண்டறியப்பட்டு வருகிறது என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

நாடு முழுவதும் இதுவரை இல்லாத அளவில் நேற்று ஒரே நாளில் 32,695 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால், நாட்டில் ஒட்டுமொத்தமாக கரோனவால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 9,68,876-ஆக அதிகரித்தது. கரோனா தொற்றால் உயிரிழந்தோா் எண்ணிக்கையும் 24,915 -ஆக உயர்ந்துள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.