ஹைதராபாத் உஸ்மானியா மருத்துவமனைக்குள் வெள்ளம்; கரோனா நோயாளிகள் தவிப்பு
தெலங்கானாவில் பெய்த கனமழை காரணமாக ஹைதராபாத்தில் உள்ள உஸ்மானியா பொது மருத்துவமனைக்குள் வெள்ள நீர் புகுந்தது. இதனால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் கரேனா நோயாளிகள் கடும் அவதி
ஹைதராபாத்: தெலங்கானாவில் பெய்த கனமழை காரணமாக ஹைதராபாத்தில் உள்ள உஸ்மானியா பொது மருத்துவமனைக்குள் வெள்ள நீர் புகுந்தது. இதனால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் கரேனா நோயாளிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
உஸ்மானியா பொது மருத்துவமனைக் கட்டடம் மிகப் பழமையான கட்டடம் என்பதால், மழை பெய்யத் தொடங்கியதும், தாழ்வான பகுதிகள் வழியாக புதன்கிழமை பிற்பகலில் மருத்துவமனைக்குள் மழை நீர் புகுந்தது.
இந்த மருத்துவமனையில் ஏராளமான கரோனா நோயாளிகள் அனுமதிக்கப்பட்டிருக்கும் நிலையில், நோயாளிகள் அனுமதிக்கப்பட்டிருக்கும் பகுதிக்குள்ளும் வெள்ளம் புகுந்தது. நிலைமையை சரி செய்ய மருத்துவமனை நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
இது குறித்து எதிர்க்கட்சிகள் ஆளும் சந்திரசேகர் ராவ் தலைமையிலான அரசு மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளன.