முகப்பு
இந்தியா

மனுவில் திருத்தம் மேற்கொள்ள அவகாசம்: பைலட் தரப்புக்கு உயர் நீதிமன்றம் அனுமதி

தகுதி நீக்கம் தொடர்பாக ராஜஸ்தான் பேரவைத் தலைவரின் நோட்டீஸுக்கு எதிராக தாக்கல் செய்த மனுவில் திருத்தம் மேற்கொள்ள சச்சின் பைலட் தரப்புக்கு ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:57 PM
தகுதி நீக்கம் தொடர்பாக ராஜஸ்தான் பேரவைத் தலைவரின் நோட்டீஸுக்கு எதிராக தாக்கல் செய்த மனுவில் திருத்தம் மேற்கொள்ள சச்சின் பைலட் தரப்புக்கு ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. (கோப்புப்படம்)
பகிர்:


தகுதி நீக்கம் தொடர்பாக ராஜஸ்தான் பேரவைத் தலைவரின் நோட்டீஸுக்கு எதிராக தாக்கல் செய்த மனுவில் திருத்தம் மேற்கொள்ள சச்சின் பைலட் தரப்புக்கு ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.

சச்சின் பைலட் உள்ளிட்ட 19 எம்எல்ஏ-க்களை தகுதி நீக்கம் செய்வது தொடர்பாக காங்கிரஸ் அளித்த புகாரின் அடிப்படையில், 19 பேரும் வெள்ளிக்கிழமைக்குள் பதிலளிக்குமாறு ராஜஸ்தான் பேரவைத் தலைவர் கடந்த செவ்வாய்க்கிழமை நோட்டீஸ் அனுப்பியிருந்தார்.

இதை எதிர்த்து சச்சின் பைலட் தரப்பு ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தது. இந்த மனு இன்று (வியாழக்கிழமை) பிற்பகல் 3 மணிக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட இருந்தது.

இந்த நிலையில், மனுதாரர்கள் சார்பாக ஆஜரான மூத்த வழக்குரைஞர் ஹரீஷ் சால்வே, "எம்எல்ஏ-க்கள் மனுவில் திருத்தம் மேற்கொள்ள விரும்புகின்றனர். எனவே, திருத்தம் செய்து புதிதாக தாக்கல் செய்ய அவகாசம் வேண்டும்" என்று வாதாடினார். இதற்கு ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.

இந்த வழக்கு தற்போது 2 நீதிபதிகள் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வரவுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →