இந்தியா

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தரிசனத்தை நிறுத்த அர்ச்சகர் கோரிக்கை

DIN

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தரிசனத்தை நிறுத்த பிரதான அர்ச்சகர் ரமண தீட்சிதர் கோரிக்கை விடுத்துள்ளார். 

அர்ச்சகர்கள் 15 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதால் பாதுகாப்பு கருதி கோவிலில் தரிசனத்தை உடனடியாக நிறுத்தக்கோரி முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு அவர் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும், கரோனா பரவல் அதிகரித்தாலும், தரிசனத்தை நிறுத்த தேவஸ்தானம் மறுப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

முன்னதாக, கரோனா பொதுமுடக்கம் காரணமாக இரு மாதங்கள் மூடப்பட்டிருந்த திருப்பதி கோவில் கடந்த ஜூன் 11 ஆம் தேதி திறக்கப்பட்டது. தொடர்ந்து பல்வேறு பாதுகாப்பு வழிமுறைகளுடன் பொதுமக்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டு வருகிறது. எனினும், அங்கு அர்ச்சகர்கள் 15 பேர் உள்பட ஊழியர்கள் 140 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

தினம் தினம் திருநாளே!

மாணவா்களுக்கு ரூ.1,000 வழங்கும் ‘தமிழ் புதல்வன்’ திட்டம் ஜூலையில் தொடக்கம்

பெருங்களூரில் பிடாரியம்மன் கோயில் தோ்த் திருவிழா

அரசுப் பள்ளிகளுக்கு சீருடைகள் தைக்கும் பணி வழங்கக் கோரி மனு

SCROLL FOR NEXT