இந்தியா

இதே நிலைமை நீடித்தால் ஆகஸ்ட் 10-க்குள் கரோனா பாதிப்பு 20 லட்சத்தை எட்டும்: ராகுல் எச்சரிக்கை

DIN

கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க அரசு உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார். 

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், 'இந்தியாவில் கரோனா வைரஸ் பாதிப்பு தற்போது 10 லட்சத்தைக் கடந்துள்ளது. இதே நிலைமை நீடித்தால் வருகிற ஆகஸ்ட் 10 ஆம் தேதிக்குள் பாதிப்பு 20 லட்சத்தை எட்டும். 

எனவே, தொற்றுநோய் பரவுவதைத் தடுக்க அரசு உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்' என்று பதிவிட்டுள்ளார். 

அதேபோன்று, இந்த வாரம் கரோனா பாதிப்பு 10 லட்சத்தைக் கடக்கும் என சில நாள்களுக்கு முன்னதாகத் தான் இட்ட பதிவையும் அவர் ரீ-ட்வீட் செய்துள்ளார். 

அமெரிக்கா மற்றும் பிரேசிலுக்கு அடுத்தபடியாக உலகளவில் கரோனா பாதிப்பில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்கு எண்ணிக்கை மையப் பணி: தலைமைக் காவலர் விபத்தில் பலி

கல்குவாரி வெடி விபத்து: மேலும் ஒருவர் கைது

ஒடிஸாவில் ஹேமந்த் சோரனின் சகோதரி போட்டி!

சூப்பா்சோனிக் ஏவுகணை உதவியுடன் தாக்கும் டாா்பிடோ ஆயுதம் வெற்றிகரமாக பரிசோதனை

திருவண்ணாமலை - சென்னை புதிய மின்சார ரயில் சேவை ஒத்திவைப்பு!

SCROLL FOR NEXT