முகப்பு
இந்தியா

கரோனாவுக்கு பலியாகும் ஆஷா, அங்கன்வாடி ஊழியர்களின் வாரிசுக்கு மாத ஓய்வூதியம்: ஒடிசா அரசு

கரோனா பாதித்து பலியாகும் ஆஷா மற்றும் அங்கன்வாடி ஊழியர்களின் வாரிசுக்கு மாத ஓய்வூதியம் வழங்கப்படும் என்று ஒடிசா மாநில அரசு அறிவித்துள்ளது.

Updated On : 17 ஜூலை, 2020 at 5:12 PM
பகிர்:

புவனேஸ்வர்: கரோனா பாதித்து பலியாகும் ஆஷா மற்றும் அங்கன்வாடி ஊழியர்களின் வாரிசுக்கு மாத ஓய்வூதியம் வழங்கப்படும் என்று ஒடிசா மாநில அரசு அறிவித்துள்ளது.

அதன்படி, கரோனா பாதித்து மரணம் அடையும் அங்கன்வாடி ஊழியரின் வாரிசுக்கு மாத ஓய்வூதியமாக ரூ.7,500 மாதந்தோறும் வழங்கப்படும் என்றும், ஆஷா ஊழியர் மரணம் அடைந்தால் அவர்களது வாரிசுக்கு மாதம் ரூ.5,000 ஓய்வூதியமாக வழங்கப்படும் என்று சிறப்பு நிவாரண ஆணையர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரோனாவுக்கு எதிரான போரில் முன்களத்தில் நின்று பணியாற்றும் அங்கன்வாடி மற்றும் ஆஷா ஊழியர்கள் கரோனா பாதித்து பலியாகும்பட்சத்தில் அவர்களது நேரடி வாரிசுக்கு மாத உதவித் தொகை வழங்கப்படும் என்றும், அவர்களுக்கு 60 வயதாகும் வரை அல்லது அவர்கள் உயிரோடு இருக்கும் வரை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.