முகப்பு
இந்தியா

ஒடிசாவில் முதல் முறையாக ஒரே நாளில் 1,078 பேருக்கு கரோனா

ஒடிசாவில் இன்று முதல் முறையாக ஒரே நாளில் 1,078 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், மாநிலத்தில் கரோனா பாதிப்பு 20 ஆயிரத்தை நெருங்குகிறது.

Updated On : 22 ஜூலை, 2020 at 1:48 PM
ஒடிசாவில் முதல் முறையாக ஒரே நாளில் 1,078 பேருக்கு கரோனா
பகிர்:


புவனேஸ்வரம்: ஒடிசாவில் இன்று முதல் முறையாக ஒரே நாளில் 1,078 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், மாநிலத்தில் கரோனா பாதிப்பு 20 ஆயிரத்தை நெருங்குகிறது.

ஒடிசா மாநிலத்தில் முதல் முறையாக ஒரே நாளில் கரோனா பாதித்தோர் எண்ணிக்கை ஆயிரத்தை எட்டியுள்ளது.

மாநிலத்தில் தற்போது கரோனா பாதித்து 6 ஆயிரம் பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 13 ஆயிரம் பேர் குணமடைந்துள்ளனர்.

Advertisement

கரோனா பாதித்து மரணம் அடைந்தோரின் எண்ணிக்கை 108 ஆக உயர்ந்துள்ளது. கரோனா உறுதி செய்யப்பட்டவர்களில் 721 பேர் தனிமைப்படுத்தும் மையங்களில் இருந்தவர்கள் என்பதும், 357 பேர் உள்ளூர் மக்கள் என்றும் கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.